நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்தவர் லதா சந்திரன். இவர் ஆளூர் பேரூராட்சி தலைவராக இருந்த து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா சந்திரனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6 மணிக்கு சுங்கான்கடையில் உள்ள லதா சந்திரன் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் லதா சந்திரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். லதா சந்திரன் பேரூராட்சி தலைவராக இருந்தபோது எந்த வகையான சொத்துக்களை வாங்கினார் என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்களை சரி பார்த்தனர்.

போலீசார் கேட்ட விவரங்களுக்கு அவர் பதில் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காலை தொடங்கிய சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது. முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லதா சந்திரன் ஏற்கனவே ஆளுர் பேரூர் அ.தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். தற்போது வீராணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal