தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். நாளை காலையில் தி.நகர் வீட்டில் இருந்து புறப்பட்டு கோவை வழியாக ஈரோடு சென்று மாலையில் அங்கு பிரசாரம் செய்வது போன்று பயண திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருப்பூர் மாவட்டத்துக்கு சென்று தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்திக்கவும் சசிகலா முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சசிகலா தரப்பினரிடம் கேட்டபோது மழை எச்சரிக்கை காரணமாக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை அடுத்த வாரத்துக்கு சசிகலா தள்ளி வைத்துள்ளார்.அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சசிகலா ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

ஈரோடு புறநகர் மாவட்டத்தின் அந்தியூர் பிரிவில் இருந்து அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். கவுந்தப்பாடி, கோபி பகுதிகளிலும் அவர் வருகிற 22-ந்தேதி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (23-ந்தேதி) திருப்பூர் மாவட்டத்தில் சசிகலா பிரசாரம் செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே திட்டமிட்ட பயணத்தின்படி அவரது சுற்றுப் பயணம் இருக்கும் என்றும் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal