பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூர் நகரில் இன்று அதிகாலையில் ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்ததால், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் சுவர் ஏறிக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.

தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்ததால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து பற்றி விரிவான விசாரணை நடத்த பஞ்சாப் இடைக்கால முதல்வர் மோஷின் நக்வி உத்தரவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal