செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வருகிற 26 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுகிறது. இதற்கிடையே மூன்றாவது நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, வழக்கை வருகிற 14&ந்தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal