தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.இது தொடர்பாக டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நாளை (14-ந்தேதி) ஆஜர் ஆகும்படி அண்ணாமலைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு அண்ணாமலை சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராகிறார்.