தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், சுதந்திர போராட்ட தியாகியின் நூற்றாண்டு விழாவில் தெலுங்கிலேயே பேசினார். ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள்.
தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்ற சுதந்திர போராட்ட தியாகியின் நூற்றாண்டு விழாவில் தெலுங்கிலேயே பேசினார். 9 நிமிடங்கள் பேசிய அவர் எந்த பிசிறும் இல்லாமல் தெலுங்கில் பேசி கைதட்டல் பெற்றார். அந்த மாநில மொழியிலேயே கவர்னர் உரையாற்றியதை ஜனாதிபதியும் பாராட்டினார்.
கவர்னருக்கும் முதல்வருக்கும் ஏழாம் பொருத்தம் என்று கூறும் நிலையில் மேடையில் இருந்த முதல்வர் சந்திர சேகரராவும், தெலுங்கை சரியான உச்சரிப்புடன் அழகாக பேசினார்கள்’ என்று கவர்னரை புகழ்ந்து தள்ளினார். ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள். அவர்களது விழாவில் நான் ஆங்கிலத்தில் பேச முடியுமா என்று சிரித்துக்கொண்டே ஒரு பன்ச்சும் வைத்தார்.