அரசியல் கட்சியினரின் எதிர்காலம் அக்கட்சித் தலைமையிடம்தான் இருக்கும்! ஆனால், தற்போது அவர்களுடைய எதிர்காலம் நீதிமன்றத்தின் கையில் இருப்பதுதான் காலத்தின் கொடுமை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தீர்ப்பளித்த முக்கிய வழக்குகள் மற்றும் அவரது பின்புலத்தைப் பார்ப்போம்..!

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பில் இருவரும் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்தனர். நீதிபதி நிஷா பானு அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி கைது செய்த சட்டவிரோதம் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம்.

அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குடும்பத்தில் ஆறாவது தலைமுறையாக சி.வி.சிம்மராஜ சாஸ்திரி மற்றும் சரஸ்வதி எஸ்.சாஸ்திரிக்கு மகனாக பிறந்தார் சி.வி.கார்த்திகேயன். சென்னை, ராயபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் ஆரம்பப் பள்ளிப் படிப்பையும், பின்னர் சென்னை ஆர்மேனியன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளியையும் முடித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் உயர்நிலைப் பள்ளியையும் முடித்தார். பி.எஸ்.சியில் பட்டம் பெற்றார். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, தாம்பரம், சென்னை மற்றும் பி.எல். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இருந்து பின்னர் எம்.எல்.யையும் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்தும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்துள்ளார். 23 ஆகஸ்ட் 1989 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்து, மறைந்த ஸ்ரீ வி.எஸ்.அலுவலகத்தில் சேர்ந்தார்.

தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணியில் மாவட்ட நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராமநாதபுரத்தில் பயிற்சி மாவட்ட நீதிபதியாக 6 ஜூன் 2005 அன்று பணியில் சேர்ந்தார். இரண்டாம் கூடுதல் மாவட்ட நீதிபதியாக (சிபிஐ வழக்குகள்), மதுரை, வேலூரில் கூடுதல் மற்றும் முதன்மை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் (விஜிலென்ஸ்), இறுதியாக புதுச்சேரியின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். புதுச்சேரி சட்ட சேவைகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக இடையிடையே பணியாற்றினார்

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் பூட்டப்பட்டதை எதிர்த்த வழக்கு, கடந்த 2020ம் ஆண்டு நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் குளறுபடி தொடர்பாக வழக்கு தொடர்ந்து, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற படித்து வரும் மாணவரின் சேர்க்கையை ரத்து செய்து உத்தரவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகிய இரு அதிமுக-வினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது.

கொரோனா பணியின்போது இறந்த முன்களப் பணியாளர்களின் உறவினர்கள் மத்திய அல்லது மாநில அரசில் எதாவது ஒரு அரசின் பலன்கள் மற்றும் இழப்பீடுகளை மட்டுமே பெற முடியும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு அரசுகளிடம் இருந்து நிவாரணம் கோர முடியாது புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என முந்தைய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.

எனவே, செந்தில் பாலாஜி வழக்கு விவாரத்தின் இறுதி முடிவு உச்சநீதிமன்றதின் கையில் என்றாலும், உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில்தான் அது இருக்கும் என்பதால், இவரது அதிரடி தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் அனைத்து தரப்பினரும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal