கள்ளக்காதல் விவகாரத்தால் பிறந்த குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த கொடூர தாயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி சசிநகர் பகுதியில் உள்ள ஏரியில் பிறந்த சில மணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வேளச்சேரி போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் சங்கீதா (26) என்பவரின் குழந்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
சங்கீதாவுக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. வறுமையின் காரணமாக ஒரு பெண் குழந்தை போதும் என தம்பதியினர் முடிவு செய்தனர். இதனிடையே, சங்கீதாவுக்கும் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், சங்கீததா கர்ப்பம் அடைந்துள்ளார். சங்கீதாவின் வயிறு பெரிதாகி வருவதை உணர்ந்த கணவர் கேட்ட போது சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகிவிட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டு குளியல் அறையிலேயே தன்னிச்சையாக பெண் குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் கணவருக்கு தெரிந்தால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதால் குழந்தையை அருகில் இருந்த ஏரியில் வீசி விட்டு சங்கீதா, வீட்டிற்கு சென்றுதும் தெரியவந்துள்ளது.