நாகர்கோவிலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தமிழக தலைவர் அண்னாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026, மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டது. 150 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள்.
அவர்களுக்கான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்கிறது என்றால்…(செங்கல் ஒன்றை கையில் தூக்கிக் காண்பித்த அண்ணாமலை) மதுரையில் இருக்கிற வேளாண் பல்கலைக்கழகம் எனது கையில் உள்ளது. ஒரு செங்கலாக இருக்கிறது. நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீங்க. செய்கிறவர்களையும் விடமாட்டீங்க… கொடுக்கனும் நினைச்சாலும் பாராட்ட மாட்டீங்க” என தெரிவித்தார்.