தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்தார்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார்.

இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் வகித்து வந்த இரண்டு துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒப்படைக்கப்பட்டன. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புக்கொள்ளவில்லை. அதனைத்தொடர்ந்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ம் தேதி அரசாணை வெளியிட்டது.

இந்நி்லையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இதனிடையே ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாகவும், அட்டார்னி ஜெனரலின் கருத்தை கேட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஆளுநர் பிறப்பித்த உத்தரவு 5 மணிநேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal