பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனி அறைக்கு மாற்றப்பட்டதாகவும், இயற்கையாக சுவாசித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை விசாரணை நடத்தி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அஞ்சியோ பரிசோதனை மேற்கொண்டதில் இருதய பகுதியில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையான ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக ஐசியூவில் இருந்த செந்தில் பாலாஜிக்கு சுவாச கருவி பொறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. காவேரி மருத்துவமனையில் இதய சிகிச்சைக்காக 7 வது தளத்தில் உள்ள இருதயவியல் சிறப்பு சிகிச்சை பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வந்தார். 7வது தளத்தில் இருந்து அவர் தற்போது 4 வது தளத்திற்கு மாற்றப்பட்டார். 4வது தளத்தில் அறை எண் 435 க்கு மாற்றம் செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுவாச கருவி அகற்றப்பட்டு இயற்கையாக சுவாசித்து வருவதாகவும், செந்தில் பாலாஜி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal