நடிகர் விஜய் மற்றும் கருணாநிதி தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்பியதாக கோவையை சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் உமா கார்க்கியை கைது செய்துள்ளனர்.
தமிழக அரசு மற்றும் திமுகவினர் மீது அவதூறு பரப்புவதாக பாஜகவினர் மீது திமுகவினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த வழக்குகளை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புபவர்களை கைது செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். இது பொய்யான தகவல். சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் சூர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் கோவையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் திமுக குறித்தும் டிவிட்டரில் உமா கார்க்கி என்பவர் மீது அவதூறு பரப்பியதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதே போல நடிகர் விஜய் தொடர்பாகவும் தனது சமூக வலைதளத்தில் விமர்சித்து கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உமா கார்க்கியை கோவை போலீசார் இன்று காலை செய்தனர். உமா கார்கிக்கு சிறந்த செயல்பாட்டாளர் என கடந்த சில தினங்களுக்கு முன்பாகத்தான் பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை போலீசார் கைது செய்தது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.