உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கணினி உதவியாளர் பணிக்கு ரூ.5 லட்சம் வரை பேரம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலி கணினி உதவியாளர்கள் பணிக்கு நியமனம் நடைபெற இருக்கிறது. இந்தப் பணி என்பது தற்காலிக பணியே ஆகும். எந்நேரமும் ஆட்சி மாறினாலோ அல்லது அலுவலக நிர்வாக காரணமாகவோ இப்பணியில் உள்ளவர்களை வேலையில் இருந்து எடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மண்டல கணினி உதவியாளர்கள் 3, ஊராட்சி ஒன்றிய கணினி உதயவியாளர் 1 என மொத்தம் 4 பேர் கணினி உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில் இப்பணிக்கு ரூ.5 லட்சம் வரை பணம் லஞ்சமாக கேட்கப்படுகிறதாம். ரூ.5 லட்சம் கொடுப்பவர்களுக்கே பணி என ‘முத்து’ குளிக்க ஆசைப்படுகிறாராம் கட்சி நிர்வாகி ஒருவர்!
இவர் மீது ஏற்கனவே அடுக்கடுக்கான புகார்கள் உள்ளன. எனவே, தகுதியின் அடிப்படையில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்று, உடன் பிறப்புக்களே கோரிக்கை வைத்து வருகின்றனர்.