சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும் வழியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைசச்சர் செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார்.