கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, கவர்னரிடம் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முறையிட இருக்கின்றனர்.

சென்னை,அ.தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச்செல்லும் கோடநாடு எஸ்டேட்டில், அவர் மறைவுக்கு பிறகு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான சயான் ஜாமீனில் வெளியே இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது, முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம், கோடநாடு […]

தொடர்ந்து படிக்க