இராமநாதபுரம், மருத்துவர் மலையரசுவிற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

அரசியல்
  •  
  •  
  •  
  •  

இராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அந்தஸ்து பெருவதற்கு சிறப்பாக பணியாற்றிய நரம்பியல் மருத்துவர் மலையரசு க்கு நற்சான்றி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவக்கல்லூரி அறிவிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கால் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். தற்போது அரசு தலைமை மருத்துவமனை மருத்து கல்லூரி மருத்துவமனையாக விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு நோயளி பிரிவுகளுக்காக புதிய கட்டிடங்கள் கட்டும் பணியும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறை மற்றும் விடுதி கட்டும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதிய மருத்துவக் கல்லூரி அந்தஸ்து வழங்குவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமணையில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு பணியினை சிறப்பாக செய்து முடித்து அந்தஸ்து பெருவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றியதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை நரம்பியல் மருத்துவர் மலையரசு வை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.