Month: March 2026

திமுகவில் யாருக்கு சீட்? 27ம் தேதி மாலை வெளியாகும் பட்டியல்!

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, முதற்கட்ட வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் தி.மு.க.வில் கூட்டணியில் நிறைய புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே, இன்றும், நாளையும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி…

பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் பாஜகவுக்கு மயிலாப்பூர்,…

எடப்பாடியின் ‘மளிகை கடை’ அறிவிப்புகள்! மருது அழகுராஜ் விமர்சனம்!

நேற்றைய தினம் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஏராளமான கவர்ச்சி திட்டங்களை அறித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புகளை ‘மளிகை கடை’ அறிவிப்புகள் என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ‘‘பதற்றபாடி’’ எனும்…

சரணடைவாரா சவுக்கு சங்கர்? சட்டப்படி நடிவடிக்கைக்கு நீதிபதிகள் அனுமதி!

சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கரை ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் இரு மோசடி வழக்​கு​களின் கீழ், கடந்த டிசம்பர் 13 அன்று கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். சவுக்கு சங்​கருக்கு இதய நோய் உள்​ளிட்ட…

வீட்டுக்கு ஒரு ஃப்ரிட்ஜ்! குடும்பத்துக்கு ரூ.10,000! அதிமுக தேர்தல் அறிக்கை!

‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை அதிமுக தலைமமையகத்தில் பழனிசாமி வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை 2026-ல் இடம்பெற்றுள்ள முக்கிய…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் வி.வி.ராஜன்…

‘2026ல் சூரியப் புரட்சி!’ மருது அழகுராஜ் சூசகம்!

‘தேர்தல் பலருக்கு (அ.தி.மு.க.) முயற்சி, சிலருக்கு (த.வெ.க.) பயிற்சி, தி.மு.க.வுக்கோ அது தமிழகத்தின் வளர்ச்சி’ என தனது வலைதளப் பக்கத்தில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் பதிவிட்டிருக்கிறார். ‘‘சூரியப் புரட்சி!’’ எனும் தலைப்பில், ‘‘தேர்தல் என்பதுபலருக்கு முயற்சி……

மாம்பழம் சின்னம்! உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் முறையீடு!

பாமக-வின் மாம்பழம் சின்னம் குறித்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு. மாம்பழம் சின்னம், பாமக பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ்…

தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு…

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள்..?

அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கிட்டத்திட்ட சுமுகமாக முடிவடைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், சிக்கல்கள் ஏதுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரிய கட்சிகள் ‘தொகுதி ஒதுக்கீட்டை’ இறுதி செய்து ஆச்சர்யமளித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சுமார் 50 தொகுதிகள்…