Month: October 2024

மழை நீர் தேங்காமல் தடுப்பதில் அரசு தோல்வி! ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்றும் பணியில் தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. ‘‘மழை நீர் தேங்காமல்…

சிறப்பு அந்தஸ்து! காஷ்மீர் முதல்வர் உமர் உறுதி..!

காஷ்மீர் ‘யூனியன் பிரதேச’ அந்தஸ்து தற்காலிகமானது என முதல்வராகப் பதவியேற்ற உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட முதல் முதல்வர் இவர்தான். முதல்வர், துணை…

வடக்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு! ஆந்திராவில் கனமழை!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில்…

வெள்ளை அறிக்கை… எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி!

‘‘அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் வரை அனைவரும் களத்தில் இறங்கி, பணிகளை மேற்கொண்டுள்ளனர். கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார்’’ என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சென்னை, சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.…

எடப்பாடியார் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!

மழையால் அவதிப்பட்டு வரும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த கோரிக்கையை வைத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.…

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

கடலூர், எண்ணூர், சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு…

ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்வில் கனிமொழி! திடீர் மன மாற்றத்தின் பின்னணி?

ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் உமர் அப்துல்லா. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார். ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா இன்று…

அடுத்த 7 நாட்களுக்கு கனமழை! வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு –…

வீடு திரும்பிய சவுக்கு சங்கர் உடல் நிலை எப்படி இருக்கிறது?

சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரது உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.…

ஒரே நேரத்தில் 3 சுழற்சிகள்! 18ம் தேதி வரை கன மழை!

சென்னை மற்றும் புறநகரில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள மூன்று வானிலை நிகழ்வுகளால் கனமழை வெளுத்தி வாங்கி வருகிறது. வங்கக்கடலின் தெற்கு பகுதியில் மையம் கொண்ட சுழற்சி இன்று…