Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

டெல்லியில் ஓபிஎஸ்! அதிமுகவில் திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றிருப்பதுதான், அ.தி.மு.க.வில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது. ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது முதலமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! துபாய் விரையும் தனிப்படை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரபல ரவுடிகள் என கைதாகயிருக்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2-வது எதிரியாக ரவுடி சம்போ செந்தில் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்போ செந்திலுக்கு எதிராக ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

மெரினா உயிர்பலி! 5 பேர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிதி!

இந்திய விமானப்படை சாகச நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண…

கையாலாகாத திமுக அரசு! எகிறி அடிக்கும் எடப்பாடி!

“முதலமைச்சர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன. இது அரசின் செயலற்றதன்மை, கையாலாகாத தன்மையை காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் இபிஎஸ் கூறியதாவது:…

ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமயைில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம்…

பண மோசடி வழக்கு! அமலாக்கத்துறை ரெய்டு..!

பணமோசடி வழக்கு தொடர்பாக, பஞ்சாபில் ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஞ்சாபில், பணமோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜலந்தர்…

அமைச்சர்களின் செயல்பாடு! அறிக்கை கேட்ட காங். மேலிடம்!

‘முடா’ வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த பின், காங்கிரஸ் மேலிடம் உஷாராகி உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடு குறித்து அறிக்கை கொடுங்கள் என்று, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், அமைச்சர்கள் மாற்றப்படுவரா…

திருமாவை திசை திருப்பும் ஆதவ் அர்ஜுனா! என்ன நடக்கிறது?

கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனா, ‘‘சினிமாவில் இருந்து வந்தவர்கள் துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஏன் துணை முதல்வர் ஆகக் கூடாது’’ என்று தெரிவித்தார். ஏற்கனவே திமுக…

5 பேர் உயிரிழப்பு! 240 பேர் மயக்கம்! கனிமொழி வருத்தம்..!

சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப…

பி.வில்சனிடம் ‘கடிந்த’ நீதிபதி! வக்கீல் சங்கம் புகார்!

வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கடிந்துகொண்ட நீதிபதியைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் என்.மாரப்பன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்…