தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்ததை த.வெ.க.வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘‘கடந்த நூறு நாட்களில் த.வெ.க. தந்திருப்பது வெத்து ஆட்சி… முந்தைய ஆட்சியின் திட்டங்களை மூடுகிற ரத்து ஆட்சி..!’’ என தனது வலைதளப் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்!
இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் ‘‘ரீல் அந்துபோச்சு’’ எனும் தலைப்பில்,
‘‘ஆட்சிக்கு வந்த
அடுத்த நிமிடமே
பூகோளத்தை சொர்க்க
மாக்குவோம்
என்பதாக
ஆசை வார்த்தைகளால்
அபிஷேகம் செய்தவர்கள்…
கடந்த நூறு நாட்களில் தந்திருப்பது
வெத்து ஆட்சி…
முந்தைய ஆட்சியின் திட்டங்களை மூடுகிற ரத்து ஆட்சி…
இவர்கள்
ஆளத் தெரியாத மக்குகள் என்பதற்கு
அரசி விலை
கைமேல் காட்சி…
மின்கட்டணம் சொத்து வரி
கண்முன் சாட்சி…
இவர் நடித்து
வந்த ஜனநாயகனும்
இவர் நடத்தி வரும்
சர்வாதிகாரமும்
ஓடாத படமே…
ஆக
மொத்தத்தில்
ரீல் அந்துபோச்சு…
என்னநாஞ் #சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்!
உண்மைதான் சொத்துவரி, மின்கட்டண உயர்வு… விலைவாசி உயர்வு என மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு திண்டாட்டம்தான் மிச்சமாகியிருக்கிறது.
