கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க.வும் பங்கற்கவில்லை. தமிழகத்தில் த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தும், த.வெ.க.வும் புறக்கணித்தது.
இந்த நிலையில்தான், சென்னையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக இன்று (அக்டோபர் 3) பங்கேற்க முடிவு செய்திருக்கிறது
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட மமதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஞானேஷ் குமாரை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக சென்னையில் இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை சத்தியபவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது!
அதுமட்டுமின்றி, இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதன்முறையாக தவெகவும் பங்கேற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மரியவில்சன் ஆகிய அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வுகளை தவெக எடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.
