பாஜக மாநிலத் தலை​வ​ராக இருந்த அண்​ணா​மலை, அக்​கட்​சி​யில் இருந்து விலகி ‘வி த லீடர்​ஸ்’ எனும் மக்​கள் இயக்​கத்தை தொடங்​கி​யுள்​ளார்.

பொது மக்​களின் அன்​றாடப் பிரச்​சினை​களுக்கு குரல் கொடுத்து ஆதர​வைத் திரட்​டும் வகை​யில் பல்​வேறு நிகழ்​வு​களை அண்​ணா​மலை நடத்தி வரு​கி​றார்.

இதன் ஒரு பகு​தி​யாக, நாளை (ஆக.16) மாலை 3 மணி அளவில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அருகே அண்​ணா​மலை தலை​மை​யில் பிரம்​மாண்ட சுற்​றுச்​சூழல் விழிப்​புணர்வு பேரணி நடை​பெற உள்​ளது. இதில் மக்கள் அனை​வ​ரும் பெருந்​திரளாக பங்​கேற்​கு​மாறு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்​.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal