திராவிடச் சகோதரர்களுக்கு தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் சூசகமாக எக்ஸ் தளத்தில் போட்டிருக்கும் பதிவுதான் சிந்திக்க வைக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியைப் பெறவில்லை என்றாலும், த.வெ.க (தமிழக வெற்றி கழகம்) தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடைய ஆதரவில் ஆட்சியையும் அமைத்தது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். தமிழகத்தில் இதுவரை நடக்காத ‘ராஜினாமாக்கள்’ அரங்கேறியது. ‘இது ஜனநாயக நாடா?’ என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க. மீது குற்றம் சுமத்தின. தவிர, எம்.எல்.ஏ.க்கள் ராஜினமாவுக்கு பின்னணில் ‘குதிரை பேரம்’ நடந்திருப்பதாக வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ‘பதிவு’ தான் கழகச் சகோதரர்களை யோசிக்க வைத்திருக்கிறது.
மருது அழகுராஜ் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில்,
‘‘ #அதானே…
Y பிரிவு பாதுகாப்பு கொடுத்து
விசில் சின்னம் கொடுத்து…
அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா நிர்மல்குமார் செங்கோட்டையன் என நிர்வாகத்துக்கு ஆட்களை கொடுத்து…
தவெகவை ஒரு பகடைக்காயாக பினாமியாக வைத்து “கழகங்கள் இல்லாத தமிழகத்தை” உருவாக்க பாஜக திட்டமிட்டதை முறியடிக்க…
திமுக & அதிமுக எனும் திராவிடச் சகோதரர்கள் ஒருவேளை இணக்கம் காண முயன்றிருந்தால் அதில் தவறேதுமில்லையே…
இரு கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்து ஒருமித்த முடிவை எடுப்பது போல்…
என்னநாஞ்
சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.
சமீபத்தில்தான் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ‘இனி வருங்காலங்களில் தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்காது’ என அடித்துப் பேசினார். எதிர்க்கட்சி இருப்பதுதான் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது. ஆனால், த.வெ.க.வினர் எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்ற தொலை நோக்கு பார்வையில் ‘ காய் நகர்த்தி’ வரும் நிலையில், மருது அழகுராஜின் பதிவு சிந்திக்க வைக்கிறது.
