இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் தொடங்கப்படாமல் இருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதியை ரத்து செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அறநிலையத் துறை சார்பில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நீதிமன்ற தடையாணை காரணமாகவும், சம்பந்தப்பட்ட கோயில்களின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டும் தற்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, தற்போது வரை தொடங்கப்படாத ரூ.115.77 கோடி மதிப்பீட்டிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ.130 கோடி மதிப்பீட்டிலான 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பீட்டிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியை கொண்டு கோயில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்’’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட 22 கட்டுமான பணிகள்
திருவாரூர் கபிலேஸ்வரர் திருக்கோயில் – திருமண மண்டபம்
திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
திருவாரூர் மாரியம்மன் திருக்கோயில் – திருமண மண்டபம்
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
திண்டுக்கல் வடமதுரை சௌந்தராஜபெருமாள் திருக்கோயில் – திருமண மண்டபம்
திண்டுக்கல் நிலக்கோட்டை நடராஜர் திருக்கோயில் – திருமண மண்டபம்
உத்தமபாளையம் சின்னமனூர் பூலாந்தீஸ்வரர் திருக்கோயில் – திருமண மண்டபம்
மதுரை ஒத்தக்கடை கோதண்டராமசாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
கோயம்புத்தூர் தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
நாகப்பட்டினம் நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
புதுக்கோட்டை திருமணஞ்சேரி சுகந்தபரிமளேஸ்வரர் திருக்கோயில் – திருமண மண்டபம்
நீலகிரி உதகை மாரியம்மன் திருக்கோயில் – வணிக வளாகம்
நாகப்பட்டினம் நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
திருவண்ணாமலை தேசூர் காசி விஸ்வநாதர் திருக்கோயில் – வணிக வளாகம்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலின் உபகோவிலான வல்லப விநாயகர் திருக்கோயில் – வணிக வளாகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் – வணிக வளாகம்
சென்னை பூங்கா நகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
சென்னை பூங்கா நகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் – வணிக வளாகம்
தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோயில் – வணிக வளாகம்
தென்காசி காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
சென்னை புழல் திருமூலநாதசுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்.
