தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் தமிழக முதல்வருக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசியதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீஸார் இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

உதயநிதியை போலீசார் விசரணைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு தனது வீட்டில் இருந்த மகன் இன்பநிதியை கட்டியணைத்துவிட்டுச் சென்றதுதான் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal