தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் விசித்திரமான பல மக்கள் தீர்ப்புகளை எழுதியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் ஆளும் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி கண்டது அக்கட்சிக்கும், ஸ்டாலினுக்கு தனிப்பட்டை வகையிலும் பெரிய பின்னடைவு.
அதேவேளையில் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளும் அரங்கேறியுள்ளன.
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி வெற்றி
ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வெற்றி
துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு வெற்றி
மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி முகம் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக: 199, திரிணமூல் காங்கிரஸ்: 88, இடதுசாரிகள்: 1, காங்கிரஸ் – 1, என முன்னிலை வகிக்கின்றன.
கேரளாவில் ஆட்சியை இழக்கும் எல்டிஎஃப்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 35, யுடிஎஃப் கூட்டணி: 97, என்டிஏ கூட்டணி: 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
அசாம் ஹேட்ரிக் வெற்றி அடிக்கும் என்டிஏ: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் என்டிஏ: 91 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரி ராஜ் பவன் சுவாரஸ்யம்: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் போட்டியிட்டார். அவருக்கு எதிராக திமுக வேட்பாளராக விக்னேஷ் கண்ணன் போட்டியிட்டார். இத்தொகுதியில் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரும் களம் இறங்கினார். இந்நிலையில் 287 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வென்றது.
அதேபோல், லாட்டரி அதிபர் மார்டின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜ் நகரில் 10205 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
தவெக வேட்பாளர்கள் வெற்றி விவரம்: > தி.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் பொதுச்செயலாளர் ஆனந்த் வெற்றி
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.
ராயபுரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜய் தாமு வெற்றி
மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா வெற்றி
அண்ணாநகர் தொகுதி தவெக வேட்பாளர் வி.கே.ராம்குமார் வெற்றி
மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன் வெற்றி
சேந்தமங்கலம் தொகுதி தவெக வேட்பாளர் சந்திரசேகர் வெற்றி
தஞ்சாவூர் தொகுதி தவெக வேட்பாளர் விஜய சரவணன் வெற்றி
அறந்தாங்கி தொகுதி தவெக வேட்பாளர் பர்வேஸ் வெற்றி
அதேபோல் புதுச்சேரியிலும் தவெக தனது கணக்கை தொடங்கியுள்ளது. தவெகவும், அக்கட்சியின் கூட்டணியான நேயம் மக்கள் கழக வேட்பாளர்களும் தலா ஒரு தொகுதிகளில் வென்றனர்.
புதுச்சேரியில் தவெக 28 தொகுதிகளிலும் அக்கட்சி கூட்டணி அமைத்த நேயம் மக்கள் கழகம் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இதில் மணவெளி தொகுதியில் தவெக வேட்பாளர் ராமு 13822 வாக்குகள் பெற்று வென்றார். உருளையன்பேட்டையில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு வெற்றி பெற்றார்.
புதுச்சேரியில் தவெக பல தொகுதிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
