கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தநிலையில் அங்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமான வரித்துறையினர் சட்டவிரோதமாக அடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

வருமான வரித்துறை சோதனை எனத் தவறான தகவலைக் கூறியதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காவல்துறையில் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்ததாகவும் வீட்டில் இருந்த பொருட்களை தாறுமாறாக கையாண்டதாகவும் கூறியிருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தநிலையில் அங்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமான வரித்துறையினர்சட்டவிரோதமாக அடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், செல்வப்பெருந்தகைக்கு எதிராக, அவரது நகர்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள வருமானவரித்துறை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உட்பட எந்த இடமும் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகள், கணக்கில் இல்லாத பணம் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் செய்யப்பட்ட வழக்கமான சரிபார்ப்புகள் மட்டுமே என்றும் செல்வப்பெருந்தகை தவறான தகவல் பரப்பியதாக, தேர்தல் ஆணையத்திலும் சென்னை காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்து.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal