‘‘ விழிப்போம் நெருப்பாய்….தடுப்போம் பொறுப்பாய்..!’’ எனும் தலைப்பில் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,
‘‘மத்தியில் ஆளுகிற பாஜக அரசு உலகம் போற்றும் இந்திய ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுத் தெறியவும் தங்களின் மதவெறி அரசியலை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு கேரளம் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகம் புதுவை உள்ளிட்ட தென்னக மாநிலங்களின் அரசியல் தயவற்ற ஆட்சியை அமைத்துக் கொள்ள ஏதுவாகவும் …
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 ஆக உயர்த்தும் சட்ட முன்வடிவை நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கிறது. இதனால் உத்தரபிரதேசம் (143), மத்திய பிரதேசம்(52), ராஜஸ்தான்(50), பீகார்(79), மகாராஷ்டிரா(76), குஜராத்(43) என வடக்கே உள்ள 6 மாநிலங்களின் எண்ணிக்கையை மட்டுமே 443 தொகுதிகளாக உயர்த்திக் கொண்டு
அவற்றில் 425 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் தென்னக மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேஇந்தியாவை ஆளமுடியும் என்பதற்கான வஞ்சக வடிவத்தில் ஒரு தொகுதி மறுவரையை வடிவமைத்துள்ளது மனச்சாட்சியற்ற பிரிவினை வாத மோடி அரசு…
மேலும் இந்த மறுவரைவில்ஆந்திரா மற்றும் தெலுங்கானா சேர்த்து (54), கருநாடகா(41), கேரளா(20), தமிழ்நாடு(49), பாண்டிச்சேரி(1) என ஆக மொத்தமாக தென் மாநிலங்களுக்கு 165 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே என்பதாக்கி இதன் மூலம்
2029 -ல் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பதை சாத்தியப்படுத்தவும் அக் கட்சி திட்டமிடுகிறது…
இப்போது நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரது முட்டுத்தாங்களில் ஆட்சி நடத்தும் பாஜக அடுத்து வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறவே இயலாது என்பதால் தொகுதி மறுவரைவு என்பதன் மூலம் செருப்புக்கு ஏற்ற வகையில் காலை வெட்டும் மூர்க்கத்தனத்தில் அக் கட்சி ஈடுபட்டிருக்கிறது..
தென் இந்தியாவை முற்றிலுமாக புறக்கணிக்கவும் மிகக் குறிப்பாக தமிழகத்தின் நலன்களை புறந்தள்ளும் வகையிலும் என்றென்றும் இந்தியாவை தாங்கள் மட்டுமே ஆளவேண்டும் என்ற குரூரத்தோடும் அவர்கள் கொண்டு வருகிற இந்த கருப்புச் சட்டத்தை மகளிருக்கு இட ஒதுக்கீடு என்கிற மூகமூடி போட்டு மோசடி நாடகம் நடத்தி தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கும் காலத்தை ஏதுவாக்கி அதன் மூலமாக எம்பிக்களின் வருகையை தடுத்து சட்டத்தை நிறைவேற்றி சந்து முனையில் சிந்துபாட சதி செய்கிறது..
ஆக.. இப்படி,
“வடக்கு வாழும் வடக்கே ஆளும் தெற்கு மட்டும் தேயும்” என்னும் பழமை வாதத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்ல பாஜக ஆட்சி திட்டமிடுவதை பொது அறிவும் பொதுவாகவே அறிவும் இல்லாத மடப்பாடி…இதன் விளைவுகளை பற்றி கிஞ்சித்தும் புரிந்துகொள்ளாமல், இதனுடைய விவரங்களை கேட்டறிந்து தெளியாமல் அதனை ஆதரித்து கொண்டிருக்கிறது பரிதாபமே…
ஆனாலும் காலத்தே விழித்து தென்னக மாநில முதல்வர்களோடு கலந்து பேசி பாஜக கொண்டு வருகிற இந்த பாசிச சட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டவும் நமது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெருமுற்சிகளை எடுத்து வருவதோடு மிகக் கடுமையான எதிர்ப்பையும் மோடியை நோக்கி அவர் முன் வைத்திருக்கிறார்.
ஆக மீண்டும் ஒரு ஆரிய திராவிட யுத்தத்திற்கு வித்திடும் விபரீதத்தில் பாஜக ஈடுபட்டு வருவதால்அதனை தடுத்து மாட்சிமை மிக்க நமது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காக்கும் கடமையும் பொறுப்பும் மீண்டும் திராவிட பூகோளத்திற்கு வந்திருக்கிறது…
என்னநாஞ்
சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவை தமிழர்கள் அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது!
