தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். அதே சமயம், இங்குள்ள தொழிற்பேட்டைக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை முறைகேடாக கல்வி நிறுவனங்கள் பெயரில் கையகப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் (தொழிற்பேட்டை) சிப்காட்டுக்காக 1991-ம் ஆண்டு 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது தமிழக அரசு! கையகப்படுத்திய உரிமையாளர்களில் 77 பேரிடமிருந்து 23.6 ஏக்கர் இடத்தை 2016-ம் ஆண்டு வாங்கியதாகக் கூறி, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் 23.6 ஏக்கர் இடத்திற்கு மட்டும் அரசிடம் விதிவிலக்கு கேட்டுள்ளனர்.

தாளாளர் யசோதரன்

இதற்கு அரசு தரப்பில், இது தொழிற்சாலை பயன்பாட்டிற்காக மட்டுமே தவிர, பள்ளிகளுக்கான இடம் இல்லை என மறுக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, இதற்கு விதிவிலக்குக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் அந்தத் துறையின் செயலாளர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசு பள்ளி பயன்பாட்டிற்கான நிலம் அல்ல, தொழிற்சாலை தொடங்குவதற்கான இடம் எனக்கூறி மறுத்துவிட்டது.

அடுத்தகட்டமாக, அத்துறையின் அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் சென்று (விட்டமின்கள் கொடுப்பதாக) பேசியிருக்கிறார்கள். இது தொடர்பாக அப்போதைய சிப்காட் நிர்வாக இயக்குநருக்கு ‘விதிவிலக்கு’ அளித்து கல்வி நிறுவனம் அமைக்கலாம் என உத்தரவிட்டதாக கூறப்படுப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் 2021 தேர்தல் வர, அந்த உத்தரவு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

ஆனால், தற்போதையே தி.மு.க. ஆட்சியில் இரண்டு சர்வே எண்ணுக்கு அனுமதி பெற்று, தற்போது மீதமுள்ள இடத்திற்கும் விலக்கு கேட்டு வருகிறார்களாம். சர்வே எண் 395, 396-ல் 14.3 ஏக்கர் சிப்காட் பெயரில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து தங்களது பயன்பாட்டில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தற்போது தி.மு.க. அரசு பெறுப்பேற்ற பிறகும், இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதாக அங்குள்ள நேர்மையான அதிகாரிகள் கூறுகின்றனர். தவிர, கொங்கு பள்ளி தாளாளர் யசோதரன், செயலாளர் சென்னியப்பன், டிரஸ்டி மெம்பர் ஜெயக்குமார், ஆகியோர் அரசுக்கு சொந்தமான இடத்தை வேறுஒருவருக்கு விற்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

மேலும், ஆட்சி மேலிடத்திற்கு நெருக்கமாக இருக்கும் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தங்களுக்கு சாதகமாக இருப்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை கல்வி நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. இது உண்மையா..? இல்லை போலியாக இப்படி ஒரு பிம்பத்தை கல்வி நிறுவனம் ஏற்படுத்துகிறதா? என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஏனவே, சிப்காட் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, சிப்காட்டுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும் என்பதுதான் பெருந்துறை மக்களின் ஒற்றை கோரிக்கையாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal