டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி மற்றும் சென்னை உள்பட மாநகராட்சிகளில் சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் வசதி அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்று (ஜூன் 7) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

இந்த வழக்கு எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal