உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தனது பிறந்தநாளையொட்டி உடன் பிறப்புக்களுக்கு ‘கிடா விருந்து’ கொடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்!
திருச்சி மாவட்டம் உப்பிலியபும் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ந.அசோகன், இவர் சமீபத்தில்தான் ஒன்றியச் செயலாளராக பொறுப்பேற்றார். இவரது தந்தை அர.நடராஜன் ஆரம்பகால கட்டத்தில் திருச்சி புறநகரில் தி.மு.க.வை வளர்த்தெடுத்தவர். இவர் ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்ற பிறகுதான் உப்பிலியபுரம் உடன் பிறப்புக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதற்கு முன்பு இருந்த ஒன்றியச் செயலாளர் ‘முத்து’ குளித்து ‘செல்வத்தை’ குவிப்பதிலேயே குறியாக இருந்ததால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் கெட்டப்பெயர் மற்றும் அதிருப்திகள் நிலவிவருகிறது.
இந்த நிலையில்தான் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகனுக்கு இன்று (27-05-2023) பிறந்தநாள். காலையில் நேரில் வாழ்த்துச் செல்ல உடன் பிறப்புக்கள் சென்றனர். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. காரணம், அமைச்சர் கே.என்.நேரு மதுரையில் இருந்ததால், அவரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கச் சென்று விட்டார். இது பற்றி ஒ.செ.விடம் கேட்டபோது, ‘எனக்கு கோவில் அமைச்சர் கே.என்.நேருதான்… அதனால், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றேன்’ என்றார்.
அதன் பிறகு, மதியம் கொல்லிமலை அடிவாரமான புளியச் சோலையில், உடன் பிறப்புக்களுக்கு ‘கறி விருந்து’ கொடுத்து அசத்தியிருக்கிறார். இந்த விருந்தில் கட்சி நிர்வாகிகள் தவிர, பிற மக்களும் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், சோர்ந்து கிடந்த உடன் பிறப்புக்களுக்கு, ‘கறி விருந்து’ கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
தி.மு.க.வில் சிலர் கனிம வளங்களைக் கொள்ளையடித்து, ‘நையா’ பைசா செலவு செய்யாமல் இருந்துவரும் நிலையில், உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தனது பிறந்த நாளன்று, உடன் பிறப்புக்களுக்கு ‘விருந்து’ கொடுத்து உற்சாகப் படுத்தியிருக்கிறார். இந்த விவகாரம்தான் அனைத்து தரப்பினரையும் வியக்க வைத்திருக்கிறது!
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் தானே… இதனை மற்ற அரசியல்வாதிகளும் உணரவேண்டும்..!