மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில்தான், இரண்டாவது நாளாக இன்றும் சில இடங்களில் சோதனை நடைபெற்றது. ஈரோடு திண்டலை அடுத்துள்ள சக்தி நகர் மூன்றாவது வீதியில் சச்சிதானந்தம் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டில் ரூ.2 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகன டெண்டரை சச்சிதானந்தம் எடுத்திருக்கிறார். இவரது வீட்டில் மேலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப் பூர்வமாக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை!