பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில், புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை மறைத்து இருந்ததாக கூறி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி புகார் அளித்து இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். இதன் காரணமாக வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொளுளாகி இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal