தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காவல் நிலையம் சென்று கொண்டிருக்கும் போதே, கள்ளக்காதலன், மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தில் காவல் நிலையத்திலேயே மயங்கிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் தீபாவளி, திருமணமாகி விவாகரத்து ஆனவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா (இப்போது அவருக்கு 27) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஈஸ்வரனுக்கும், தீபாவளியின் மனைவி சங்கீதாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிக்கிறது. இதையறிந்த தீபாவளி, மனைவி சங்கீதா மற்றும் ஈஸ்வரன் ஆகிய 2 பேரையும் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை கைவிட மறுத்து, வழக்கம் போல் காதலை தொடர்ந்தார்களாம்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவும், ஈஸ்வரனும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்களாம். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு, மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதல் ஜோடி தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் இதனையடுத்து போலீசார், தீபாவளியை அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்க்ள். அப்போது தனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை என்று சங்கீதா போலீசில் கூறினாராம். இதற்கிடையே இந்த புகாரை, ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக மயிலாடும்பாறை போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக விசாரணைக்கு நேற்று காலை 10 மணிக்கு ஆஜராகும்படி மகளிர் போலீசார் 3 பேருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்கள, கள்ளக்காதலனுடன் ஓடியது மட்டுமின்றி, தன்மீது புகார் கொடுத்ததால் தீபாவளி கடும் ஆத்திரம் அடைந்தார். அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரும் வழியிலேயே ஈஸ்வரனையும், சங்கீதாவையும் காலி செய்ய ஸ்கெட்ச் போட்டார்.இதற்காக ஆண்டிப்பட்டி பஜாருக்கு சென்ற தீபாவளி, நேற்று காலை புதிதாக ஒரு கத்தியை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
பின்னர் ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்துக்கு வந்து, அவர்கள் வருகையை எதிர்பார்த்து முன்கூட்டியே வந்தார். காலை 10.30 மணி அளவில் ஈஸ்வரனும், சங்கீதாவும் ஒரு பஸ்சில் இருந்து ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்தில் ஜோடியாக வந்து இறங்கி இருக்கிறார்கள். இதனையடுத்து பக்கத்திலேயே இருந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் 2 பேரும் நடந்து சென்றனர். இதனைக்கண்ட தீபாவளி வேகவேகமாக பின்னால் சென்றார்.
ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரனையும், சங்கீதாவையும் சரமாரியாக குத்தினார். இதை பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓடி கலைந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் உயிர் பிழைப்பதற்காக ஈஸ்வரனும், சங்கீதாவும் அங்கிருந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நோக்கி ஓடினர். இருப்பினும் அவர்களை பின்தொடர்ந்து ஓட, ஓட விரட்டி சென்று தீபாவளி கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதற்கிடையே ரத்தம் சொட்ட, சொட்ட கள்ளக்காதல் ஜோடியினர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வாசலுக்கே சென்று விட்டனர். சிறிதுநேரத்தில் அவர்கள் 2 பேரும் அங்கு மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த மகளிர் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஈஸ்வரனையும், சங்கீதாவையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கீதாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அவர்களை தாக்கிய கத்தியுடன், ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் தீபாவளி சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஓடிப்போன மனைவியை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திவிட்டு, கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.