தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும் 11 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வரும் 7ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல ஊர்களில் கோடை மழை கொட்டித்தீர்த்துள்ளது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. சாலைகளில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்தின் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 15 செ.மீ., சாத்தூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்செங்கோடு, திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி, சின்கோனா, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், மாமல்லபுரத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவானது. பூதலூர், காஞ்சிபுரம், கடலூர், திருக்கழுக்குன்றம், எண்ணூரில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. தழுதாழை , சங்கராபுரம், குமாரபாளையத்தில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் 6ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கில் ஒரு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் 7ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறினார். இதன் காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய் வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal