அண்ணாமலைக்கு எதிராக கனிமொழி எம்.பி., ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்!

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ‘ஆடியோ & வீடியோ’ கலாச்சாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் ஆடியோ & வீடியோவை வைத்து அரசியல் செய்ய முடியாது! மக்களும் வாக்களிக்கமாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 14ந்தேதி தி.மு.க.வினருடைய சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.

தமிழகத்தில் தி.மு.க.வின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவதால், ‘புரட்டி வெடிக்கும்’ என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், ‘சொத்து பட்டியலை’ வெளியிட்டு புஸ்வானமாக்கினார்! இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் தொடர்ந்து அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த நோட்டீஸில், ‘எந்தவொரு ஆதரமுமின்றி, அரசியல் நோக்கத்திற்காக, அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டிருப்பதாக கூறியிருக்கிறார். எனவே, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்’ எனவும் எச்சரித்திருக்கிறார் கனிமொழி எம்.பி.!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal