கர்நாடகாவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலை வைத்து, எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திரத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார்!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட முடிவு செய்து இருந்த நிலையில் அங்கே எடப்பாடி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் வாங்கப்பட்டார். தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முதலில் முடிவு செய்தது. புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அங்கே பாஜகவை ஆதரிக்காமல் தனியாக போட்டியிடும் முடிவை அதிமுக எடுத்து இருந்தது.

இங்கே போட்டியிடுவது அதிமுகவிற்கு அவ்வளவு அவசியம் இல்லை. ஆனாலும் அதிமுக சார்பாக வேட்பாளர் களமிறக்கப்பட முக்கிய காரணங்கள் இருந்தன.

முதல்காரணம், வேட்பாளரை களமிறக்க இரட்டை இலை சின்னத்தை கேட்க முடியும். இரண்டாவது காரணம், தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடியும் முன் இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும். அதோடு தேர்தல் ஆணையம் நம்மை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி திட்டமிட்டு இருந்தார். எடப்பாடியின் ராஜதந்திர திட்டமாக இது பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே, எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இல்லை சின்னம் அவருக்குத்தான் என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.

தேர்தலை காரணம் காட்டி ராஜதந்திரமாக சின்னத்தை பெற்ற எடப்பாடி. தற்போது பாஜகவை குளிர் விற்கும் விதமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்று கர்நாடகாவில் வேட்புமனுவையும் வாபஸ் வாங்க வைத்து உள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். இதை வழி மொழிந்த எடப்பாடியும்.. பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக அறிவித்தார். அமித் ஷா கூட்டணி உள்ளது என்று சொல்லியும் கூட்டணியை எதிர்த்து எடப்பாடி வேட்பாளரை களமிறக்கி இருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பாஜகவை குளிர் விற்கும் விதமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்று கர்நாடகாவில் வேட்புமனுவையும் வாபஸ் வாங்க வைத்து உள்ளார். தமிழ்நாட்டில் பாஜக தலைமையுடன் மோதலில் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி டெல்லி தலைமையுடன் நட்பாகவே இருந்து வருகிறார்.

அதிமுக பாஜக கூட்டணி பற்றி சமீபத்தில் பேசிய எடப்பாடி, நாங்கள் பாஜகவுடனே கூட்டணியில் இருக்கிறோம். இதை அமித் ஷாவும் கூறிவிட்டார். பாஜகவில் தேசிய தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். மாநில தலைவர்கள் முடிவு இங்கே செல்லாது. பாஜகவில் தேசிய தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்று எடப்பாடி அண்ணாமலையை மேலும் சீண்டினார். இந்த நிலையில் நேற்று முதல்நாளும் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி, அவர்கள் கட்சி பாஸ் மேலே இருக்கிறார். அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். கீழ இருப்பார்கள் இங்கே மாறிக்கொண்டே இருப்பார்கள்.

மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு. கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் தான் இதில் முடிவெடுப்பார்கள், என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நேற்று நடந்த கூட்டத்திற்கு ஓ.பி.எஸ். தரப்பு 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும், பத்தாயிரம் பேரை கூட்ட முடியாமல் போனதால், வருத்தத்தில் இருக்கிறதாம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal