கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரும் மனு மீது தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.