முகத்தில் தாடி வைத்துள்ள காதலன்களுக்கு பெண்கள் முத்தம் கொடுக்கும் போது உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் விளைவு வேறுவிதமாக மாறிவிடும்!
இப்போதுள்ள வாலிபர்கள் பலரும் முகத்தில் தாடியுடன் சுற்றுவதையே விரும்புகிறார்கள். கல்லூரிக்கு செல்லும்போதும், ஏன் திருமணம் செய்து கொள்ளும்போது கூட அவர்கள் முகத்தில் தாடி இருப்பது பேஷனாகி விட்டது. இப்படி தாடியுடன் இருக்கும் ஆண்களை தான் பிடித்திருப்பதாக பல நிகழ்ச்சிகளில் பெண்கள் கூறியுள்ளனர். அப்படி கூறும் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை தோல் நோய் சிறப்பு டாக்டர் முனீப்ஷா என்பவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் வெளிநாட்டு பெண் ஒருவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அந்த பெண், தனது ஆண் நண்பரை முத்தமிட்ட பின்பு தனது கன்னத்தில் தேமல் ஏற்படுவதாக கூறியிருந்தார். அந்த ஆண் நண்பருக்கு முகத்தில் தாடி உள்ளது. அந்த தாடிகாரணமாகவே தனக்கு இதுபோன்ற தேமல் ஏற்படுவதை தோல் நோய் சிறப்பு டாக்டர் கண்டுபிடித்து கூறியதாக பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ஆண்கள் வைத்திருக்கும் தாடியில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தாடி வைத்த ஆண்களை முத்தமிடும்போது இதுபோன்ற தேமல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஆண்கள் வைத்துள்ள தாடியை தினமும் சுத்தம் செய்வதில்லை. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படும்.
எனவே தாடி வைத்த ஆண்களை முத்தமிடும் முன்பு பெண்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனக்கூறியுள்ளார்.