பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இருந்த நிலையில், அக்கட்சி மாநில நிர்வாகி அண்ணாமலைக்கு இன்றே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்!

‘அண்ணாமலை மீது குற்றம்சாட்டி பா.ஜ.க.வில் இருந்து மேலும் ஒரு மாநில நிர்வாகி விலகியுள்ளார். பா.ஜ.க.வின் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா செய்துள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க தகுதியில்லாத சிலருக்கு அண்ணாமலை பொறுப்பு கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளர். கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகளிடம் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் வசூலிக்கும் படியும் அண்ணாமலை கூறியதாக புகார் அளித்துள்ளார்.

கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் பா.ஜ.க. வளராது என்றும் கிருஷ்ண பிரபு தெரிவித்துள்ளர். பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என்று கிருஷ்ண பிரபு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளர். பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பா.ஜ.க.வில் பதவி தரப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பணம் உள்ளவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக கிருஷ்ண பிரபு தகவல் அளித்துள்ளார். பா.ஜ.க.வில் தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் கட்சியில் விலகுவதாக கிருஷ்ணபிரபு தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்து விலகும் தனது முடிவுக்கு மாநில தலைவர் அண்ணாமலை, பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எம்.ஷா உள்ளிட்டோரே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார மாநில செயலாளராக இருந்து வருபவர் கிருஷ்ண பிரபு இவர் தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களில் கட்சி நிர்வாகிகளை ஏட்படுத்துவதாக அண்ணாமலை மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சிக்காக உண்மையாக வேலை பார்த்த நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வேலை செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்துள்ளார். ஆருத்ரா போன்ற மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் மாநில தலைமையுடன் நெருக்கமாக இருப்பதாக குற்றச்சாட்டு அளித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பா.ஜ.க. தான் பொறுப்பு என்றும் கிருஷ்ணபிரபு தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal