திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ வழக்கில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஓளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நாராயணசாமி தனது வீட்டின் அருகே வசித்து வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

சிறுமி கூறுவதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாக இது குறித்து பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை விசாரித்த மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் ஓட்டுநர் நாராயணசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பழனியில் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal