புதுவையில் மசாஜ் செய்ய வந்த அமெரிக்க பெண்ணிடம், மசாஜ் ஊழியர் அத்து மீறி ‘மஜா’ செய்ததாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்ட குப்பம் அருகே உள்ள சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் தங்கும் விடுதியுடன் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்து தங்குவது வழக்கம். இந்நிலையில் புதுவையை சுற்றி பார்க்க வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கசிஹெர்னாண்டஸ் (வயது35). என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றார்.
அப்போது மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் ரெக்கீஸ் என்பவர் கசிஹெர்னாண்டஸ்க்கு மசாஜ் செய்தார். அப்போது அவர் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து கசிஹெர்ண்டஸ் கோட்ட குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை நடத்தினார். ஆனால் புகார் செய்த பெண் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா இந்த புகாரை கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கும்படி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்கு பதிவு செய்து மசாஜ் சென்டர் ஊழியர் ரெக்கிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.