‘ஓ.பன்னீர் செல்வம் கட்சி நலனுக்காக எதையும் செய்ததில்லை… விரக்தியின் உச்சத்தில் தற்போது இருக்கிறார்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘‘ ஓபிஎஸ் நிதானம் இழந்து பேசுகிறார். பிக்பாக்கெட் என ஓபிஎஸ் பேசுவது அரசியல் நாகரிகமா?. பிக்பாக்கெட் என்று சொன்னால் அது ஓபிஎஸ்-க்கு தான் பொருந்தும். விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என கூறியவர் ஓபிஎஸ்தான். ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் கட்சி நலனுக்காக செயல்பட்டதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு அரசியல் சகுனி’’இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.