மாமியாருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவனை, மனைவியும், மாமியாரும் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம்தான் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி திருவெறும்பூரில் வசித்து வரும் 27 வயது இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. அந்த இளைஞர் மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த இளைஞருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மாமியாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.

மருமகனின் கொடுமையை தாங்காமல் மாமியார் தனது மகளிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்திருக்கிறார் ஆனாலும் அந்த இளைஞர் மது குடித்து விட்டு வந்து மாமியாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்

இதனால் மனம் வெறுத்த போன மாமியாரும்,மனைவியும் இனி பாலியல் தொந்தரவு கொடுத்தால், ஒரேடியாக கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அந்த இளைஞர் மாமியாருக்கு மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இதில் ஆத்திரம் அடைந்த தாயும், மகளும் கொதிக்கும் வெந்நீரில் மிளகாய்பொடி கலந்து இளைஞர் மீது ஊற்றினர். இதில் அவரது உடல் வெந்தது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி வியாழக்கிழமை காலையில் உயிரிழந்தார். இதையடுத்து புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மாமியாரையும், மனைவியையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் வெந்நீர் ஊற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal