மதுரை விமான நிலைய ஒடுதளத்தில் இருந்து பேருந்து மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும்போது, அ.ம.மு.க.வைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வீடியோதான் அ.தி.க.வினரை மட்டுமின்றி, சாதாரண பொது ஜனங்களையும் கொந்தளிக்க வைத்தது.
கொங்குமண்டலத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் எடப்பாடியார் தரப்பு, தென் மாவட்டங்களிலும் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க சிவகங்களையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்ற படியேறி அனுமதிவாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த எடப்பாடியாரை, ஏர்போட்டில் அமமுக கட்சியைச் சேர்ந்த வாலிபர் மிகவும் அவதூறாக பேசினார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்ததும் வீடியோவில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில்தான் அ.ம.மு.க. வாலிபரை அ.தி.மு.க.வினர் தாக்கதாக எடப்பாடி பழனிசாமி உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறிப்பாக பெரம்பலூரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்.பி.க்கள், ஆர்.பி.மருதைராஜா, மா.சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இளம்பை தமிழ்ச் செல்வன், பூவை செழியன், நகர செயலாளர் ராஜ பூபதி, ஒன்றியச் செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், ரவிச்சந்திரன், செல்வமணி, சசிக்குமார், மகளிர் அணி நிர்வாகிகள் ராணி, லட்சுமி, ராஜேஸ்வரி மற்றும் கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க.வினருக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கு உதவிக்கரம் நீட்டிய என்.டி.சந்திரமோகன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பெரம்பலூரில் நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து என்.டி.சந்திரமோகனிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தில் தலைவர்களை அவதூறாக பேசி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இது எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானது கிடையாது. சென்னையில் மெட்ரோ ரெயிலில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பயனித்தபோது அருகில் ஒரு வாலிபர் நின்றார் என்பதற்காக முதல்வரே கண்ணத்தில் ஓங்கி அறைந்தார். இந்த வீடியோ வைரலாது. இது மு.க.ஸ்டாலினுக்கு சகிப்புத் தன்மை இல்லாததையே காட்டுகிறது.
ஆனால்,எடப்பாடி பழனிசாமியை விமான நிலைய பேருந்தில் ஒரு வாலிபர் அப்படியொரு அவதூறாக பேசியபோதுக்கூட, உணர்ச்சிவசப்படாமல் கையை அசைத்துவிட்டு பயணித்தார். அருகில் இருந்த எடப்பாடியாரின் பாதுகாவலர்தான் அந்த வாலிபர் வீடியோ எடுப்பதை தடுத்து நிறுத்தினார். ஒரு இயக்கத்தின் தலைவரை இப்படி அவதூறாக பேசுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி நாடுநிலையாளர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மறைவிற்குப் பிறகு, தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக்கி அ.தி.மு.க.வை மீண்டும் ஒரு எஃகு கோட்யை£க மாற்றி வழி நடத்திக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஆளும் கட்சியினரே எடப்பாடி பழனிசாமியை பார்த்து பயப்படும் வகையில் மிகவும் சிறப்பாக கட்சியை வழிநடத்திச் செல்கிறார். இதனை பொறுத்துக்கொள்ளாத ஆளும் அரசு எடப்பாடியார் மீது வழக்குப் போட்டதை, அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் சினிமா துறை, ரியல் எஸ்டேட் உள்பட அனைத்தும் ஒரு குடும்பத்தின் பிடிக்கு சென்றுவிட்டது. அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மக்களும், தொழில் நிறுவனர்களும் சுதந்திரமாக செல்படுவார்கள். எத்தனையோ, தடைகளைத் தாண்டி, கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளை கடந்து வந்த எடப்பாடியாருக்கு, இந்த வழக்கு ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால், அரசியல் காழ்புணர்ச்சிகாக இப்படி வழக்கு போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார் ஆவேசமாக!