உலக மகளிர் தினத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் மாண்புமிகு திருமதி சண்முகப்பிரியா அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைக்க, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர் திருமதி சுகந்தி MD அவர்கள், திருவிடைமருதூர் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி புனிதா மயில்வாகனன் அவர்கள், திருபுவனம் பேரூராட்சி தலைவர் திருமதி அமுதவல்லி அவர்கள், கும்பகோணம் தாலுக்கா சர்வேயர் செல்வி அப்ரின் ஷபானா அவர்கள், வழக்கறிஞர் திருமதி புவனேஸ்வரி அவர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு நிகழ்ச்சியாக பெண் காவலர்களின் குழந்தைகளுக்கு குழந்தைகள் காப்பகம் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் துவங்கப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சுமார் 500 மாணவிகள் மற்றும் மகளிர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து துறை சார்பாக வழங்கப்பட்ட சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேருந்து பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கான நல்லுறவை மேம்படுத்த, மாணவிகள் திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து காவல் நிலைய செயல்பாடுகளை தெரிந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காப்பாய்( COPEYE) என்ற கார்ட்டூன் போலீஸ் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளி மாணவ மாணவிகள் அச்சமின்றி காவல்துறையை அணுக பள்ளி மாணவர்களுக்கு (காப்பாய் ஸ்டிக்கர் பொறிக்கப்பட்ட) புகார் பெட்டிகள் வழங்கப்பட்டன.
திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்த KAVAL UTHAVI APP SIGNATURE AND PALM STAMP CAMPAIGN” விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சியில் வருகை தந்து சிறப்பித்த மகளிர் மட்டும் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன .