திருடுபோன நகைகளை உடனடியாக மீட்ட நாங்குநேரி தனிப்படையினரை, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் சரகத்திற்குட்பட்ட கோவைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் 01.03.223 ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து 16 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் நாங்குநேரி காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி, அவர்கள் தலைமையிலான, உட்கோட்ட தனிப்படை போலீசார் தலைமை காவலர்கள் திரு. ஆறுமுகநயினார், திரு.நம்பிராஜன் முதல்நிலை காவலர்கள் திரு.பெருமாள், திரு.முருகராஜ், திரு.துரைமுருகன், திரு.வெங்கட சீனிவாசன், திரு.மாரியப்பன் மற்றும் திருமதி.ஈஸ்வரி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 5 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட 16 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேற்படி திருட்டு வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு துரிதமாக எதிரிகளை கைது செய்து 16 பவுன் தங்க நகைகளை மீட்ட உட்கோட்ட தனிப்படை காவல் துறையினர் மற்றும் மூன்றடைப்பு காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப., அவர்கள் இன்று நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார். மேலும் காவலர்களுக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal