தமிழக விவசாயிகள் பொருளாதார வசதியின்றி சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘‘தமிழகத்தில் விவசாயத் தொழிலைப் பாதுகாக்க, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, விவசாயக் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். வறட்சியான மாவட்டங்களில் கருகிய பயிர்களுக்கு இழப்பீட்டை காலத்தே வழங்காத காரணத்தால் விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு பொருளாதாரம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.

எனவே தமிழக அரசு, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்மணிகளின் ஈரப்பதம் 20 சதவீதம் வரை இருந்தால் கொள்முதல் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் செய்யும் போது வேறு எந்த தொகையையும் தேவையில்லாமல் பிடித்தம் செய்யக் கூடாது’’ இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal