சென்னையில் ‘ஹைடெக்’காக பாலியல் தொழில் செய்து வந்த ‘பலே புரோக்கரை’ சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து சிறையில் தள்ளியிருக்கிறார்கள்.
கைதான பிரபல பாலியல் புரோக்கர் கார்த்திகேயன் தந்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது:
‘‘பெரம்பூர் பகுதியில் ஆரம்பத்தில், கார் டிரைவராக இருந்திருக்கிறார் கார்த்திகேயன். சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் டிரைவராக வேலை கிடைத்துள்ளது. அப்போதுதான் கார்த்திகேயனுக்கு மும்பையை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தில் டிரைவர் தொழிலை விட்டு விட்டு, நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பாலியல் புரோக்கர்கள் கேட்கும் இளம்பெண்களை பிடித்து கொடுக்கும் புரோக்கராக மாறியுள்ளார்.. அதில் பணம் கொட்டியது.. இந்த 9 வருடங்களா அசைக்க முடியாத ஹைடெக் புரோக்கராக வளர்ந்துவிட்டார் கார்த்திகேயன்.. இவர் மீது ஏற்கனவே 5 பாலியல் கேஸ்கள் சென்னையில் உள்ளன..
இதுபோல் பெங்களூரு, மும்பை, டெல்லியிலும் இவர் மீது ஏகப்பட்ட கேஸ்கள் பதிவாகி உள்ளது.. பிரபல ஐடி நிறுவனங்களுக்கு ஆன்லைன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் மேனேஜராக இருப்பதாக சொல்லியே இளம் பெண்களிடம் பழகுவாராம்.. தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் என்று அளந்துவிடுவாராம்.. இந்த விளம்பரத்தை சோஷியல் மீடியாவிலும் பதிவிடுவாராம்.. அதை பார்த்துவிட்டு ஏராளமான பெண்கள், வேலைக்கு அப்ளிகேஷன் போடுவார்கள்.. அந்த அப்ளிகேஷனில் வடமாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை மட்டுமே கார்த்திகேயன் தேர்ந்தெடுப்பாராம்.. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்டர்வியூ நடத்தி, அதிலும் படித்த பெண் என்ஜினியர்களை மட்டுமே செலக்ட் செய்வாராம்.
அப்படி தேர்வு செய்யப்பட்ட இளம் பெண்களை சென்னைக்கு வரவழைப்பாராம்.. ஐடி கம்பெனி சார்பிலேயே வேலைக்கு அழைத்து கொள்கிறோம் என்று சொல்லி, ஃப்ளைட் டிக்கெட் எடுத்து தந்து அந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வருவாராம்.. ஐடி நிறுவனம் சார்பில் ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைப்பதாக சொல்லி ரூம் போட்டு தருவாராம்.. பார்ட் டைம் நேரத்தில் சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசைவார்த்தைகளை சொல்லி, அவர்களை நம்பவைத்து.. பல கோணங்களில் நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி, வீடியோ, போட்டோக்களை எடுத்து வைத்து கொள்வாராம் கார்த்திகேயன்..
இறுதியில், அந்த வீடியோ, போட்டோக்களை வைத்து, சோஷியல் மீடியாவில் வெளியிட போவதாக மிரட்டி, அவர்களை கட்டாயப்படுத்தி, சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல்களின் பாலியல் புரோக்கர்களுக்கு வயதுக்கு ஏற்றப்படி விற்றுவிடுவாராம்.. இந்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை பேசுவார் கார்த்திகேயன். விற்பனை செய்யப்பட்ட இளம்பெண்கள் வேறு வழியின்றி, இந்த புரோக்கர்களிடம் அடிமைகளாக சிக்கி உள்ளனர்.. ரூ.50 ஆயிரம் மாத ஊதியத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்… இந்த பெண்களை வைத்துதான், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார் கார்த்திகேயன்..
சில பெண்கள் சிறிது நாட்கள் பாலியல் புரோக்கர்களிடம் இருந்துவிட்டு தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர் என்றாலும், இந்த விஷயம் கேள்விப்பட்டு, ஆடம்பர வாழக்கைக்கு ஆசைப்பட்டு, வேறு சில பெண்களும், தாங்களாகவே வந்து புரோக்கர் கார்த்திகேயனிடம் விழுந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் யாருமே இதுவரை புகார் அளிக்காததால் கார்த்திகேயன் தொழில் ஜெகஜோதியாக வளர்ந்து கொண்டு வந்துள்ளது.. கேரளா, மும்பை, பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரேதேசம், ஆந்திரா, மேற்கு வங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களை இந்த 9 வருடமாக ஃப்ளைட் மூலம் அழைத்து வந்து, ஹோட்டல்களில் தங்கவைத்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக போட்டோ ஷூட் எடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார் கார்த்திகேயன்..
கார்த்திகேயனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இந்த விவரங்கள் அனைத்தும் உறுதியாகி உள்ளன.. 100க்கும் மேற்பட்ட பெண்களின் போட்டோக்களும் அதே செல்போனில் பதிவாகி உள்ளன.. இந்த பெண்கள் அனைவரையுமே பாலியல் புரோக்கர்களுக்கு விற்றுவிட்டதாக கார்த்திகேயனும் தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த லிஸ்ட்களை போலீசார் எடுத்து வருகிறார்கள்.. அவர்கள் இப்போது எங்கே தங்கி இருக்கிறார்கள்? யாரிடம் சிக்கி உள்ளார்கள் என்ற தகவல்கள் எதுவும் தெரியாததால், பாலியல் புரோக்கர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்களை சேகரிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள்..
ஆனால், இப்படிப்பட்ட அட்டூழியம் செய்த கார்த்திகேயன் பற்றி அவரது குடும்பத்தினருக்கு எதுவுமே தெரியாதாம்.. ஏதோ ஒரு ஸ்டார் ஹோட்டலில் கார்த்திகேயன் டிரைவர் வேலை பார்ப்பதாக மட்டுமே மனைவி நம்பி கொண்டு இருந்தாராம். இவர் தனது குடும்பத்தினரை பார்க்க வரும்போது போலீசார் பொறி வைத்து பிடித்திருக்கின்றனர். இப்போது கார்த்கேயன் போலீசார் பிடியில் உள்ளார்.. 5 நாள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.. அப்போதுதான், கார்த்திகேயன் பின்னணியில் உள்ள விஐபிகள் யார், சிக்கிய பிரபலங்கள் யார் என்பதெல்லாம் தெரிய வரும்’’ என்கிறார்கள்!