அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கப் பார்க்கிறது என எடப்பாடி ஆதரவாளர் இன்பதுரை கொந்தளித்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. அதனால் அதில் இப்போது நாங்களோ, நீதிமன்றமோ முடிவு எடுக்க வேண்டியது இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று இடைக்கால உத்தரவு வர உள்ளது.
அதோடு இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பொதுக்குழு முடிவுகளை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கில் தீர்ப்பு வந்த பின்பே பொதுக்குழுவை ஏற்க வேண்டுமா? வேண்டாமா என்று முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தனது பதிலில் கூறியுள்ளது. இந்த பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கில் ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது. இரண்டு தரப்பும் போட்டியிடுவதால் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எடப்பாடி தரப்பிற்கு இது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த பதிலை எடப்பாடி ஆதரவாளரும், வழக்கறிஞருமான இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘‘வழக்கு நிலுவை, எனவே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை பதிவேற்றவில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் பதில் படு அராஜகம்!tmt. சசிகலாவின் வழக்கும் நிலுவைதானே? ஓபிஎஸ் பெயரை மட்டும் எப்படி பதிவேற்றம் செய்தீர்கள்? சிவில் வழக்கு 20வருடம் நிலுவைஎனில் அதுவரை சின்னத்தை ஒதுக்காமல் கட்சியை முடக்குவீர்களா?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.